வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய அப்டேட்டாக குரூப் அட்மின்கள் தங்கள் நிர்வகிக்கும் குழுக்களின் மெசேஜ்களை நீக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
உலக அளவில் மிக முக்கியமான தகவல் பரிமாற்று சமூக வலைதள செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களின் செயல்பாட்டு முறையை மேலும் எளிமையாக்கும் வகையில் அடுத்தடுத்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது புதிய அப்டேட்டாக வாட்ஸ் அப்பில் உள்ள குழு நிர்வாகிகள் தாங்கள் நிர்வகிக்கும் குழுவில் பகிரப்படும் அனைத்து செய்திகளையும் நீக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வெளியிடுகிறது என WABetInfo தெரிவித்துள்ளது.
இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சத்தின் முலம் வாட்ஸ் அப் குழுவின் நிர்வாகிகள் தாங்கள் நிர்வகிக்கும் குழுவினை சிறப்பான முறையில் வழிநடத்த முடியும் என தெரிவித்துள்ளது.
இந்த புதிய அம்சத்தை சோதனை செய்து பார்க்க, பயனர்கள் தாங்கள் குழு நிர்வாகியாக செயல்படும் குழுவில் உள்ள செய்திகளை நீக்கி புதிய அப்டேட்டை உறுதிப்படுத்தி கொள்ளலாம் எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.