செய்திகள்தொழில்நுட்பம்

வட்ஸ்அப் வழங்கவுள்ள வசதிகள்!!

What's up

உலகளவில் பிரபலமான வாட்ஸ்அப் செயலி, அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவர புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பயனர்கள் ஒரே சமயத்தில் 32 பேருடன் வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் அழைப்பு பேச முடியும்.

இதுதொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வாட்ஸ்அப் கம்யூனிட்டி அம்சம் அறிமுகம் செய்தபோது வெளியிட்டது.

தற்போது வரை, அதிகப்பட்சமாக 8 பேர் மட்டும் குரூப் வாய்ஸ் காலில் இணையமுடியும். மேலும், தற்போதைய எண்ணிக்கை அதிகரிப்பு குரூப் வாய்ஸ் காலுக்கு மட்டுமே பொருந்தும். வீடியோ காலுக்கு எவ்வித அதிகரிப்பு செய்யவில்லை.

விரைவில் 2 ஜிபி அளவிலான ஃபைல்களை ஷேர் செய்யும் வசதியும் பயனர்களுக்கு கிடைக்கவுள்ளது.

ஐஓஎஸ் பொறுத்தவரை, 22.8.80 வெர்ஷன் ஃபைல் ஷேரிங் அம்சமும் சேர்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர புதிய ஓடியோ லேஅவுட், ஸ்பீக்கர் ஹைலைட், அலைவரிசை போன்றவை வரவிருப்பதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது.

இதற்கிடையில், வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருவதாக WABetainfo தெரிவித்துள்ளது. அதாவது, பயனர்கள் இமேஜ் அல்லது வீடியோவை புதிய கேப்ஷனுடன் அனுப்பும் முன்பு, யாருக்கும் அனுப்புகிறோமோ அவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அனுமதியை வழங்குகிறது. இதே வசதி வாட்ஸ்அப் ஸ்டேடஸ் ஆப்ஷனிலும் இணைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் v2.22.10.6 பீட்டா பயனர்களுக்கு, இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அனைத்து பீட்டா பயனர்களுக்கும் வழங்கப்படவில்லை.

WABetaInfo இன் படி, சாதாரண வாட்ஸ்அப் பயனர்களால் சாட்டில் இருந்து மீடியா அனுப்பும் போதோ அல்லது ஸ்டேட்ஸ் அப்லோட் செய்யும் போதோ, நிறையப் பேரை செலக்ட் செய்திட முடியாது.

அதனை வாட்ஸ்அப்பின் கேமரா டேப் வியூவில் மட்டும் தான் செய்திட முடியாது. எனவே இந்த அப்டேட் செயற்பாட்டுக்கு வந்தால், பயனர்களால் போட்டோ, வீடியோ, GIf அனுப்பும் போது, வெவ்வேறு பெறுநர்களை செலக்ட் செய்திட முடியும். ஸ்டேட்ஸிலும் புதிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button