செய்திகள்தொழில்நுட்பம்

ஆஹா! வட்ஸ்அப் இல் இனி இப்படி ஒரு வசதியா!!

What's aap

ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி வாயிலாக பதில் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் ஸ்டோரி அல்லது ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் விரைவாக பதிலளிக்க முடியும். இந்த வசதி தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ளது.

நீங்கள் பார்க்கும் ஸ்டேட்டஸூக்கு டைப் செய்வதற்கு பதிலாக அன்பு, கோபம், சோகம் போன்ற உணர்வுகளைப் பதிலாக அனுப்பமுடியும்.

உலகளவில் பிரபலமான வட்ஸ்அப் செயலியில் இந்த வசதி இல்லாதது பயனர்களிடம் குறையாகவே இருந்தது. தற்போது, அந்தக் குறையை வட்ஸ்அப் தீர்க்கவுள்ளது,

WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, வட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் ரிப்ளை செய்யும் வசதி சோதனையில் இருப்பதாகவும், விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Quick Reactions’ வசதி மூலம் வாட்ஸ்அப்பில் நண்பர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு எமோஜி அனுப்பலாம். அதில், மடிந்த கைகள், கைதட்டல் கைகள், பார்ட்டி பாப்பர் உட்பட சில ஸ்மைலிகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப்பில் இந்த எமோஜிகள் தான் இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளதா அல்லது பயனர்கள் தங்களது விருப்பத்தின் பெயரில் செலக்ட் செய்யலாமா என்பது குறித்த விபரம் வெளியாகவில்லை.

கிடைத்த தகவலின்படி, ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை செய்திட 8 எமோஜிகள் ஒப்ஷனாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, வாட்ஸ்அப் செயலியில் கம்யூனிட்டி வசதி, குரூப் அட்மினுக்கு கூடுதல் வசதி, 2ஜிபி ஃபைல் ஷேரிங் போன்ற வசதிகள் ஏற்கனவே தரப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button