இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை தொடர்பில் உலக உணவுத் திட்டம் விடுத்துள்ள அறிவிப்பு!!

WFP

கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இலங்கையில் சுமார் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையுடன் இருப்பதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்ட அறிக்கையின்படி, இலங்கை மக்கள் பொருளாதார மற்றும் உணவுநெருக்கடிகளின் சுமைகளை தொடர்ந்து உணர்கிறார்கள்.

உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்கள்
10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் (6.26 மில்லியன் மக்கள்) உணவுப் பாதுகாப்பற்றவர்கள், அவர்களில் 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.

2022 ஜூனில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்துடன் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள், போதுமான மற்றும் போசனை உணவு திறனை முடக்கியுள்ளது.

பெரும்பாலான குடும்பங்கள் (61 சதவீதம்) குறைந்த விருப்பமான மற்றும் குறைவான சத்துள்ள உணவை உண்பது மற்றும் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது போன்ற உத்திகளை பயன்படுத்துகின்றன.

பெருந்தோட்டத்துறை மக்கள்
ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதுமான உணவுகளை உட்கொள்வதில்லை.

பேருந்தோட்டத்துறையில் வாழும் மக்களிடையே உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது, அங்கு பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளன.

உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சமாளிக்கும் உத்திகளின் அனைத்து நடவடிக்கைகளிலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை விட, பெருந்தோட்ட குடும்பங்கள் தொடர்ந்து மோசமான விளைவுகளைக் கொண்டுள்ளன.

நகர்ப்புற குடும்பங்கள் இப்போதைக்கு சமாளிப்பதற்கு சேமிப்பைக் குறைக்கும் அதே வேளையில், பெருந்தோட்ட மக்கள் ஏற்கனவே உணவு மற்றும் பிற தேவைகளுக்காக கடன் பெறுகின்றனர்.

சுமார் 200,000 குடும்பங்கள் அவசரகால வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றன, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்தில் மொத்த பணவீக்கம் 54.6 சதவீதமாக உள்ளது, இது 1954 க்குப் பிறகு மிக அதிகமானது என கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உணவுப் பாதுகாப்பு, விவசாயம், வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் உலக உணவு திட்டம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button