தமிழர்களின் பண்டைய வாழ்வியல் என்பது அழகானது மட்டுமன்றி ஆழமான நம்பிக்கைகளைக் கொண்டது. மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு திருமண வைபவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. எமது முன்னோர்களின் நடைமுறையின் படி மாட்டு வண்டியில் திருமண அழைப்பு நடைபெற்று திருமணம் செய்துவைக்கப்பட்டது. வீடும் நெற்கற்றைகளினால் சோடனை செய்யப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் பாரம்பரியங்களை பேணியதாக நடைபெற்றுள்ளது.
தற்போதைய காலத்தில் தமிழர்களின் பண்டைய பாரம்பரியங்கள் மறக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அவற்றினை எதிர்கால சந்ததிக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த திருமணத்தை நடாத்தியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.