‘காலநிலை மாற்றத்தால் உலகில் தற்போது ஏற்பட்டு வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வெப்பநிலை அதிகரிப்பு ஆகும்.
அதன்படி , பங்காளதேஷிலும் வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதாவது நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த மாத நிலவரப்படி அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4 டிகிரி செல்சியஸ் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலை அதிகரிப்பு குறித்து பங்காளதேஷின் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அஜிசுர் ரகுமான் இது குறித்து தெரிவிக்கையில்,
கடந்த 60 ஆண்டுகளில் இது அதிகபட்ச வெப்பநிலை ஆகும். வருகிற நாட்களில் வெப்ப அலை மீண்டும் உருவாகி நாட்டில் அரிசி உற்பத்தி 40 சதவீதம் வரை குறையலாம் என தெரிவித்துள்ளார்.
எனவே மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு இது மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.