இலங்கைசெய்திகள்

கொழும்பில் 14 மணிநேர நீர் விநியோகத் தடை!!

water cut

கொழும்பின் பல பகுதிகளில் நாளை இரவு 10 மணிமுதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிவரை 14 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது எனவும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களில் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 முதல் 12 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய வாதுவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நாகொட, போம்புவல, பிலமினாவத்தை, பயாகல, மக்கோன, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தர ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button