பொதுவாக பெற்றோலிய எரிபொருட்கள் ஆவிப்பறப்புடையன.
விசேடமாக பெற்றோல் சாதாரன அறை வெப்பநிலையில் (25-27°C) ஆவியாகும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது வீதி வெப்பநிலை (Road Temperature) 42°C ஆகக் காணப்படும் வரட்சியான காலமாகும்.
இந்தக் காலத்தில் பிலாஸ்திரிக் பொருட்களில் பெற்றோலை சேர்க்கும்போது பெற்றோல் ஆவியாகும் தன்மை அதிகமாக காணப்படும். மேலும் பிலாஸ்திரிக் பொருட்களும் பெற்றோலிய கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் போத்தலினூடாக கசிந்து ஆவியாகலாம். இதற்காகவே மேலை நாடுகளில் பெற்றோலை சேமிக்க என விசேடமாக கொள்கலன்கள் சந்தையில் உள்ளன. அதற்காகவே அவற்றிற்கு விசேட சிவப்பு நிறப் பூச்சுக்களையும் பூசி இருப்பார்கள்.
சரி அப்படி ஆவியாகினால் என்ன நடைபெறும்?
மூடிய அறைகளில் பெற்றோலை சேமித்து வைக்கும் போது ஆவியாகும் பெற்றோல் வாயு நிலையில் அறையில் முற்றாகக் காணப்படும். இது திரவ பெற்றோலியம் Liquid Petrol Gas (LPG) ஒத்தது. இலகுவில் தீப்பற்றக் கூடியது. இந்தநிலையில் ஒரு தீப் பொறி போதும் வீடு தீப்பற்ற. நீங்கள் மின்சார ஸ்விச்சை போட்டால் கூட அதிலிருந்து வெளிப்படும் அந்த சிறிய திப்பொறி போதும்.
எனவே தேவைகளுக்கு அதிகமாக பெற்றோலை சேமித்து வைப்பதை தவிருங்கள். அதையும் தாண்டி சேமித்து வைக்க வேண்டிய தேவை காணப்படின் கண்ணாடிப் போத்தல்களில் சேமித்து நன்கு குளிரான இடங்களில் வையுங்கள்.
பெற்றோலியப் பெருட்கள் தீப்பற்ற கூடியன, அவதானமாக இருங்கள்.