இன்று (05) முதல் அரச பணியாளர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க, விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் இந்த விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நிறைவடையும் என்றும், குறித்த திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தமை குறிப்படத்தக்கதாகும்.