இலங்கைசெய்திகள்

2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம்- தேர்தல் ஆணைக்குழு!!

vote list

2021ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 இற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளும் உரிமைகோரல்களும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைத்துள்ள மேன்முறையீடுகள் மாவட்ட உதவி மற்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்களின் கண்காணிப்பின் கீழ் தற்போது பரிசீலிக்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button