இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலர் அதிரடியாக கைது!!

Velikada Jail

வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைக் காவலர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் சந்தேகத்திற்குரிய மாத்திரைகள் சிலவற்றை கொண்டுச்செல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறைக் காவலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யத் தயாரானபோது குறித்த சிறைக் காவலர் மாத்திரைகளை எடுத்து வாயில் மறைத்து வைக்க முயன்றார்.

இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கடும் முயற்சியுடன் மாத்திரைகளுடன் சிறை காவலரை கைது செய்தார்.

குறித்த மாத்திரைகள் மருந்து மாத்திரைகளா அல்லது போதை மாத்திரைகளா என்பதை பரிசோதனை செய்வதற்காக சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button