பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் அறிமுகமாகியுள்ள படம் வேலன். குடும்ப கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் முகேன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள முகேன்இ அதனை முழுமையாக பூர்த்தி செய்தாரா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்..
பிரபுவின் மகனான முகேன் ஒழுங்காக படிக்காமல் பன்னிரெண்டாம் வகுப்பை 3 முறை எழுதி பாஸ் செய்ததால் இவர் மீது கோபப்பட்டு பேசாமல் இருக்கிறார் பிரபு. ஒருவழியாக கல்லூரிக்கு செல்லும் முகேன்இ அங்கு நாயகி மீனாட்சியை பார்த்ததும் காதல் விழுகிறார்.
மீனாட்சி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தன் காதலை மலையாளத்தில் ஒருவரை வைத்து கடிதம் எழுதி கொடுக்கிறார். அந்த கடித்தால் முகேனுக்கும்இ அவரது காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
அதே சமயம் கேரளா எம்.எல்.ஏ. ஹரிஸ் பெரடி பிரபு மீது இருக்கும் பகையை தீர்க்க முயற்சி செய்கிறார். இறுதியில் முகேன் காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? ஹரிஸ் பெரடிக்கும் பிரவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை..
முகேனுக்கு இது சிறப்பான அறிமுகமாக அமைந்துள்ளது. முதல் படம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலுக்காக உருகுவது தந்தை பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக வந்து கொடுத்த வேலையை செய்துள்ளார்.
முகேனுடன் செல்லமாக சண்டைபோட்டு கவனிக்க வைத்திருக்கிறார் ப்ரிகிடா. முதல் பாதியில் ராகுலும் இரண்டாம் பாதியில் சூரியும் காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். பிரபு, ஹரிஸ் பெரடி தம்பி ராமையா ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காதல், காமெடி பாசம் என்று கமர்சியல் அம்சத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவின்.
நேர்த்தியான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து அளிக்கிறது. கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக முகேன் பாடிய ‘சத்தியமா சொல்றேண்டி’ என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளும் வசங்களும் ரசிகர்களுக்கு சலிப்பு தட்ட வைக்கிறது.
மொத்தத்தில் வேலன் ரசிகர்களுக்கு விருந்து..