இலங்கைசெய்திகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பாதீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது!!

Vavuniya South Tamil Pradeshiya Sabha

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

வவுனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் த.யோகாராயா தலைமையில் இன்று (07) இடம்பெற்றது. இதன்போது 30உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

இந்நிலையில் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு விவாதிக்கப்பட்டது. சபையில் பிரசன்னமாகியிருந்த சிறிரெலோ கட்சியின் இரு உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்ததுடன் வாக்கெடுப்பிற்கு செல்லுமாறு தெரிவித்திருந்தனர். ஆயினும் அனேகமான உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு வாக்கெடுப்பிற்கு செல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button