இலங்கைசெய்திகள்

வவுனியா வைத்தியசாலை கொரோனா தடுப்பு பிரிவிற்கு உதவிகள் வழங்கி வைப்பு!!

vavuniya hospital

Roundcube Webmail :: வவுனியா வைத்தியசாலை கொரோனா தடுப்பு பிரிவிற்கு உதவிகள் வழங்கி வைப்பு. வவுனியா பொது வைத்தியசாலையின் கொரோனா தடுப்பு பிரிவிற்கு “சொற்ப உயிர் மூச்சு” எனும் தொனிப்பொருளில் ஊழியர்கள் அனைவரதும் பங்களிப்புடன் சியப்பத பினான்ஸ் நிறுவனத்தினால் இரண்டு தொழிற்பாடுகள் கொண்ட இரு நோயாளர் கட்டில்கள் அண்மையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு சியபத பினான்ஸ் பி.எல்.சி வவுனியா கிளை முகாமையாளர் மேகவண்ணன் ஜெஸிந்திரனின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. 
இவ் நிகழ்வில் சியபத பினான்ஸ் பி.எல்.சி சார்பில் குத்தகை மற்றும் கடன் பிரிவு துணை பிரதானி  ஹிஸாம் சியாட், அறவீட்டு பிரிவு பிராந்திய பொறுப்பதிகாரி நளின்ட சில்வா, தங்கக்கடன் பிரிவின் பகுதிப் பொறுப்பதிகாரி சரித் விதானகே, வவுனியா கிளை முகாமையாளர் மேகவண்ணன் ஜெஸிந்திரன் மற்றும் வவுனியா கிளை சந்தைப்படுத்தல் அலுவலர் சக்திவடிவேல் மோகனரூபன், வைத்தியசாலை பணிப்பாளர் ராகுலன், வைத்தியர் மதுரகன் மற்றும் திட்டமிடல் பிரிவு மருத்துவ அதிகாரி வைத்தியர் டேமியன் தவப்பிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
“சொற்ப உயிர் மூச்சு” எனும் தொனிப்பொருளில் Covid-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன்  ஊழியர்கள் அனைவரதும் பங்களிப்புடன் சியப்பத பினான்ஸ் நிறுவனத்தினால் நாடளாவிய ரீதியில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button