இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சரால் வவுனியாவில் விதை பொதிகள் வழங்கி வைப்பு!!

vavuniya

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று (25)  உழுந்து, பயறு பயிர் செய்கை திட்டத்தின்கீழ் 12 மில்லியன் ரூபா பெறுமதியான விதை தானிய பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கமைய பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரம் பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உளுந்து மற்றும் பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ் மேற்படி விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.


மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர  பிரதேச செயலாளர்கள், மாவட்ட விவசாயிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த விதை தானிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button