இலங்கைசெய்திகள்

வவுனியாவில், சாதனை மாணவிகளுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!!

Vavuniya

வவுனியா திருஞான சம்பந்தர் வித்தியாலயம் சார்பாக தேசிய ரீதியில் பழு தூக்கல் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்ற மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவிகளான எஸ். கஜேந்தினி ( 57கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தையும்) யூ. கீர்த்தனா (60கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தையும்) ஆகியோரைப் பாராட்டி , அவர்களின் கற்றல் நடவடிக்கைக்குத் தேவையான துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வசித்து வரும் தாயக உறவான மு. நகுலேஸ்வரனின் நிதிப்பங்களிப்பில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலரினால் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button