இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!!

Vavuniya

வவுனியாவில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வவுனியா ஊடக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிப்பதோடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக வவுனியா ஊடக அமையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நேற்று (15.04) வவுனியாவில் விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற எமது ஊடகவியலாளரான வரதராசா பிரதீபன் என்பவர் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை வவுனியா ஊடக அமையம் கண்டிப்பதோடு தன்னை ஊடகவியலாளர் என வெளிப்படுத்திய பின்னரும் அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

வவுனியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊடகவியலாளர்கள் மீதான அத்துமீறல்களும் அவமதிப்புக்களும் சிறிது சிறிதாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது ஊடகவியலாளர் மீது கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அளவிற்கு நிலமை மோசமடைந்துள்ளமை வவுனியாவில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இவ்வாறான போக்கை ஊடக சமூகமாகிய நாம் இலகுவாக கடந்து செல்ல முடியாது. போதிய வருமானமின்றி தமது குடும்ப பொறுப்புக்களையும் சுமந்தபடி ஊடகப் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் அவர்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதனால் இத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டும்” என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

Related Articles

Leave a Reply

Back to top button