Uncategorized

வவுனியா பரசங்குளம் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டது!!

vavuniya

இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து பரசங்குளம் காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த குண்டுகள் மீட்கப்பட்டன.

இதன்போது ஆர்.பி. ஜி ரக குண்டு 01, 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு 03ம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button