இலங்கைசெய்திகள்

வவுனியாவில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் அவதி!!

vavuniya

வவுனியாவில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் அவதி. வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழையினால் திருநாவற்குளம் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.


இதனால் இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அத்தோடு இப்பகுதியின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான பிரச்சினை மழை காலங்களில் தமக்கு ஒவ்வொரு வருடமும் ஏற்படுவதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button