இலங்கைசெய்திகள்

வலம்புரி கவிதா வட்டத்தின் 75 ஆவது பவள விழா கவியரங்கு!!

vakavam

வலம்புரி கவிதா வட்டத்தின் 75 ஆவது பவள விழா கவியரங்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில்
மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் அரங்கில் இன்று 18 12 2021 சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் தினகரன்/ தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் திரு. செந்தில் வேலவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். “வலம்புரி கவிதா வட்டத்தின் பயணத்தில் தினகரன் என்றும் துணை நிற்கும் ….” 2013 ஆம் ஆண்டு மீள் ஆரம்பிக்கப்பட்ட வலம்புரி கவிதா வட்டத்தின் முதலாவது கவியரங்கில் அதிதியாக கலந்து கொண்டேன். இன்று இந்த 75 ஆவது கவியரங்கிற்கும் பிரதம அதிதியாக கலந்து கொள்வதையிட்டு மிகவும் மகிழ்கிறேன். பல அமைப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் இருக்கும் நிலையில் வகவம் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடாத்தி வருவது பாராட்டுக்குரியது ” என தினகரன் / தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் திரு. செந்தில் வேலவர் அவர்கள் வ. க. வத்திற்கு வாழ்த்துக்கூறினார்.

வகவ சிரேஷ்ட ஸ்தாபகர் கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி முன்னிலை வகித்தார். வகவ செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீனின் தலைமை வகித்தார்.மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் அவர்களை நினைவு கூர்ந்தும் அண்மையில் பிரிந்த ஆளுமை செ. கணேஷலிங்கன் அவர்களையும் நினைவு கூர்ந்து மௌனப் பிரார்த்தனை நடைபெற்றது.

கவிஞர்கள் கலா விஸ்வநாதன், ரவூப் ஹஸீர், தமிழ்த் தென்றல் அலி அக்பர், இலங்கை பொன் மனச் செம்மல் எம். எஸ். தாஜ்மஹான், ஈழகணேஷ், எஸ். தனபாலன், காத்தான்குடி பௌஸ், , கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், மஸீதா அன்சார், கல்முனை சுலக்ஷனா சுபசங்கர், மபாஹிர் மௌலானா, எம். எச். எம். நவ்ஸர், உணர்ச்சிப் பூக்கள் ஆதில், வாழைத்தோட்டம் எம். வஸீர், பர்ஹாத் சித்தீக், போருதொட்ட ரிஸ்மி, மலாய் கவி டிவாங்ஸோ ஆகியோர் கவிதை பாடினர்.
கலைவாதி கலீல், அன்பழகன். எம். எச். விக்கிரமசிங்க, கலாபூஷணம் முஹம்மத் அலி, பிறைக்கவி முஸம்மில், எம். ஐ. எம். முஸம்மில், பாணந்துறை ஏ. எல். எம். அஸ்வர், எஸ். ஏ. கரீம், வினோதினி ஹேசானி, யாழ் அஸீம் போன்றோர் சபையை அலங்கரித்தனர். பொருளாளர் ஈழகணேஷ் வரவேற்புரையும் தேசிய அமைப்பாளர் எஸ். தனபாலன் நன்றியுரையும் வழங்கினர்.

Related Articles

Leave a Reply

Back to top button