மறைந்த ‘ஆரம்பக்கல்வி ஆசிரிய இமயம்’ எனப்போற்றக்கூடிய தரம் 5 புலமைப்பரிசில் புகழ் பூத்த அசிரியரான அழகன் அண்ணாவின் மறைவு, வடக்குக் கல்விச் சமூகத்திற்கு வெகுவிரைவாக ஈடுசெய்தவிட முடியாத ஒரு பாரிய இழப்பாகும். அந்த வகையில், 31ம் நாள் நினைவநாளில், இவரது ஆத்மா சாந்தியடையப்பிரார்த்தனை செய்துகொண்டு, இவரது கல்விச் சேவையில் இவர் ஊடகங்கள் ஊடாக ஆற்றிய பங்களிப்பு பற்றி நினைவுகூர்ந்து உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
என்னைவிட இரண்டு வருடங்கள் மூத்த இவர், உயர்தரக் கல்வியின் பின்னர், மட்டுவில் வளர்மதி கல்வி நிலையத்தில் சிறப்பாகக் கற்பித்து வந்தார். எனது உயர்தரப் பரீட்சையயின் பின்னர் நானும் இவருடன் இணைந்து ஒரு வருடம் கற்பிக்கும் வாய்ப்புக்கிடைத்தது. பின்பு நான், பல்கலைக்கழக கல்விக்காக 4 வருடங்கள் ஈடுபட இருக்க, இவருக்கும் ஆசிரிய நியமனம் கிடைத்து பயிற்சியும் முடிவடைந்திருந்தது. பின்பு நான் ஊடகத்துறைறக்குத் தொழில் நிமித்தம் செல்ல, இவர் மாவட்ட ரீதியில் பிரபல ஆசிரரியராகத் தன்னைச் செதுக்கிக்கொண்டார். 2002ம் ஆண்டு தொடக்கம் இவருடன் ஊடகத்தின் ஊடாக பரீட்சை வழிகாட்டல்கள் என்னும் விடயத்தில் இணைந்து பணியாற்றியய ரீதியில் பினவரும் பெருமைகள் அழகன் அண்ணாவைச் சாரும்.
- 2000ம்அண்டுகளில் அந்த நிறுவனத்தின் ஆசிரியரின் வேண்டுகோளின் பேரில் வாராவாரம் தரம் 5 மாதிரி வினாத்தாள்களைத் தொடர்ச்சியாகத் தயாரித்து வழங்கி வடமாகாணம் முழுவதும் உள்ள மாணவர் பயன்பெறவும் பத்திரிகை விறற்பனை மேம்படவும் உதவி ஆசிரியர் இவராவார். இதில் பத்திரிகை ஆசிரியர் வித்தி ஐயாவின் பங்களிப்பும் அளப்பரியது.
- 2004ம் ஆண்டிலிருந்து உதயன், சுடரொளி பத்திரிகையின் கல்விப்பிரிவுப் பொறுப்பாசிரியராக நான் இருந்த போது, இரண்டு பத்திரிகைகளையும் இணைத்து வருடாவருடம் நடத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை வழிகாட்டல் நேரடிக்கருத்தரங்கில் எமது வேண்டுகோளின் பேரில் 15 வருடங்களாக மிகச்சிறப்பான முறையில் வளவாளராகச் செவை அடிப்படையில் பங்குபறற்றியவர். குறிப்பாக, என்னுடன் நாடளாவிய ரீதியில் 20 வளவாளர்கள் இணைந்த பணியாற்றியபோதும், அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் அன்பழகன் ஆசிரியருக்கான கேள்வி உச்சசமாகவே இருக்கும். வேறு பிரதேச மாணவர்கள் கூட அன்பழகன் ஆசிரியர் என்றால் கருத்தரங்கு மண்டபத்தில் பூரிப்புடன் மகிழ்ந்து கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள். நான் கூட இவரது கற்றல் உத்திகளைக் கவனிக்க அவரது மண்டபதத்தையே கடமைக்காகத் தெரிவு செய்வேன்.
- ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான புலமைச்சுடர் கையேட்டிற்காக தொடர்ச்சியாகப் பத்து வருடங்கள் ஆக்கங்களை இலவசமாகத் தந்து உதவி தனது கற்பித்தல் சேவைகள் நாட முழுவதும் கிடைக்கச் செய்தவர்.
- பிற்பபட்ட காலத்தில் வலம்புரி, தினக்குரல் , காலைக்கதிர் போன்ற பத்திரிகைகள் மூலமும் வினாத்தாள் சேவையை ஆற்றியவர்.
- ஊடகங்கள் மூலம் கற்பித்தல் நுட்பங்களை நேர்காணல் மூலம் தெளிவுபடுத்தியவர்.
- ஒட்டு மொத்தத்தில் அதிக சேவைகளைக் குறைந்த காலத்தில் ஊடகத்துறைக்கு வழங்கிய சாதனைக்குரியவர் அன்பழகன் ஆசிரியர் என்றால் மிகையாகாது.
இப்படிச் சிறந்த சேசவையாளராகத் திகழ்ந்த அமரர் அன்பழகன், இப்போதும் உயிருடன் இருப்பது போன்ற உணர்வே என்னிடம் உள்ளது. இவரது கற்பித்தல் சாதனையைக் கௌரவிக்கும் முகமாக இவருக்கு ஒரு கௌரவ பட்டத்தை யாழ். கல்விச் சமூகம் ஊடாக வழங்கவேண்டும் என்ற எனது ஆதங்கத்தைத் தெரிவித்து மீண்டும் இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை மன்றாடி எனது இரங்கல் உரையை நிறைவு செய்கிறேன்.
எழுதியவர் – திரு . ஆர். ஜனதன்.
{ஆசிரியரும் சுயாதீன ஊடகவியலாளரும்}
புலமைச்சிகரம் அமரர் . வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கு எமது ஐவின்ஸ்தமிழ் இணையதளத்தின் மூலம் நடத்தப்படுவதால், அவரது நினைவாக அவரது கல்வெட்டில், சான்றோர்களால் பகிரப்பட்ட நினைவுக்குறிப்புகள் அடங்கிய இரங்கல் உரைகள் எம்மால் பதிவிடப்படுகின்றது.