இலங்கைசெய்திகள்

நாட்டின் நிலைமை படுமோசம் – அரசு உடன் விலக வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து!!

United People's Power

“நாட்டின் நிலைமை படுமோசமான நிலைமைக்குச் சென்றுள்ளது. இந்த அரசு உடனடியாக விலகி நாட்டின் நிர்வாகத்தை பிரதான எதிர்க்கட்சியிடம் கையளிப்பதே சிறந்தது.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்தார்.

ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுமே பலிகடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர பதவி விலகினால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமா?

தற்போதைய நிலையில், நாட்டில் நிதி நெருக்கடி படுமோசமான நிலைமைக்குச் சென்றுள்ளது. அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டு மக்கள் சுமார் 4 தொடக்கம் 5 மணித்தியாலங்கள் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட அச்சமடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டரைக் கொண்டு வந்ததன் பின்பு, அந்தச் சிலிண்டர் எந்த வேளையில் வெடிக்கும் என்று அச்சத்துடனேயே மக்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி சதொச விற்பனை நிலையத்தில் அனைத்துப் பொருட்களும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று அரசு கூறினாலும் பொருட்களுக்கு த் தட்டுப்பாடு நிலவுகின்றது” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button