இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டாம் – ஐக்கிய காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு!!

United Congress Party

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை வெளியீட்டுள்ளது.

இதற்கமைய ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் க‌ல்குடாத் தொகுதி அமைப்பாள‌ர் ச‌ல்மான் வ‌ஹாப் த‌லைமையில் மட்டக்களப்பு – ஓட்ட‌மாவ‌டியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்ட‌ம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு சுலோகங்களை ஆர்ப்பாட்ட‌க்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

வடக்கு, கிழக்கை இணைப்ப‌த‌ற்குத் துணைபோகும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர‌ஸின் துரோக‌த்த‌ன‌த்தைக் கண்டிக்கின்றோம், கிழக்குத் தலைமைகளின் அனுமதியற்ற தீர்வுகளை ஏற்கமாட்டோம், வடக்கு, கிழக்கை இணைக்காதே போன்ற வாசகங்களுடன் அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், வடக்கு – கிழக்கு இணைவுக்கு எதிராக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியால் தேசிய‌ ம‌ட்ட‌த்தில் ஊடக மாநாடுகளும், க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்று கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button