உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகமான ஒடேசாவின் அற்புதமான நகரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய கடற்படை கப்பல்கள் குறித்த நகரத்தை நோக்கி நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ரஷ்ய படைகளின் நகர்வை தடுக்க, பொதுமக்கள் மணல் மூட்டைகளைக் குவித்து அடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ரஷ்யா முன்னெடுத்த போர் குடிமக்களுக்கு எதிரான போராக மாறிவிட்டது. இதனையடுத்தே தடுப்புபணிகளில் ஈடுபடுவதாக உக்ரைனின் ஒடேசா மக்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் இராணுவத்துடன் போரிடுவதற்கு உக்ரைய்னுக்குள் செல்வதற்கு பெலாரஸ்ஸின் துருப்புக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக
உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஒரு பேஸ்புக் பதிவில், உக்ரைனின் ஆயுதப் படை இதனைக் குறிப்பிட்டுள்ளது. அதில், பெலாரஸ்ஸின் இராணுவப் பிரிவுகள், உக்ரைனுடனான எல்லையைக் கடப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த, ரஷ்யா பெலாரஸின் பிரதேசத்தை பயன்படுத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சுமத்தி வருகின்றது.