யுக்ரைன் தலைநகரான கியூவ்வுக்கு வடக்கே உள்ள புறநகர் பகுதிகளில் ரஷ்ய இராணுவம் உள்நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் குரல்கொடுக்க வேண்டும் என யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தடுக்க யுக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.