இதுவரை 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஐக்கிய இராச்சியம் (UK) இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது என்று UK வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலை உள்ளடக்கிய 58 தீவுகளைக் கொண்ட பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் (BIOT) இருந்து இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவலில் இல்லை என்றும், அவர்கள் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்றும் இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் அமைச்சர் ஜெஸ்ஸி நார்மன் தெரிவித்தார்.
இங்கிலாந்து அரசாங்கம் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை விமானம் மூலம் இலங்கைக்கு தானாக முன்வந்து திரும்புவதற்கு உதவியுள்ளது.
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்தோர் வெளியேறுவதை ஆதரிப்பதற்கும், அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இங்கிலாந்து அரசாங்கம் உறுதியுடன் உள்ளது,” என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.