இலங்கைசெய்திகள்

2மணி நேர மின்சார துண்டிப்பு- வலுசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!!

udaya kammanpila

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3 000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன் இனி டொலர்கள் இன்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமென்றும் வாகன சாரதிகளால் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button