பிலிப்பைன்சை தாக்கிய பாரிய சூறாவளியில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 மற்றும் 17ஆம் திகதிகளில் ஏற்பட்ட வெள்ளத்துடனான சூறாவளியில் மேலும் 60 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரம் உட்பட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாக அந்த நாட்டு அனர்த்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்சில் உள்ள 430 நகரங்களில் 4 லட்சத்து 82 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
அவற்றில் பெரும்பான்மையான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.