இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் திரிபோஷ உற்பத்தி ஆரம்பம்!!

Triposa

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளது.

இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரப்பியாக திரிபோஷா வழங்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button