இலங்கைசெய்திகள்

வடமாகாண அதிகாரிகளுக்கு அவசர பணியிடமாற்றம்!!

Transfer

வடமாகாண நிர்வாகத்தின் கீழுள்ள நான்கு அதிகாரிகளுக்கு இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன், வடக்கு மாகாண பேரவைச் செயலகச் செயலாளர் செந்தில் நந்தன், மாகாண கட்டடங்கள் திணைக்களம் பணிப்பாளர் எஸ். மோகனதேவன், வடக்கு மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் சிவகுமார் ஆகியோருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் வடக்கு மாகாண நிர்வாகத்திலிருந்து மத்திய அரச நிர்வாக செயற்பாட்டுக்கு உள்வாங்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியிடமாற்றம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறையாகும் எனவும் உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராக பற்றிக் டிறஞ்சனும் பேரவைச் செயலகத்தின் பதில் செயலாளராக குகநாதனும் கட்டடங்கள் திணைக்கள பதில் பணிப்பாளராக ஈஸ்வரராஜாவும் பணிபுரிவாவார்கள் என வடமாகாண உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button