இலங்கைசெய்திகள்

நெல்லியடி மத்திய கல்லூரியில் இளம் புத்தாக்குனருக்கான பயிற்சி செயலமர்வு!!

Training workshop

22.04.2022 அன்று நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 8,9 மற்றும் 10 ஆம் தர மாணவர்களுக்கு “மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைக் கையாளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல்” தொடர்பிலான அறிவை வழங்குதலை நோக்கமாக கொண்டு பயிற்சி செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.

குறித்த செயலமர்வில் சூரியக்கலங்களை ஒழுங்கமைத்து சூரியப்படலை அமைத்து அதிலிருந்து மின்குமிழ், மின்விசிறி, வலுப்பொதி போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களை இயக்குதல் தொடர்பான பயிற்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

எமது கல்லூரியின் முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் கல்லூரியின் தொழில்நுட்பக்கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இச் செயலமர்விற்கு வேலும் மயிலும் நிறுவனத்தினர் அனுசரனை வழங்கியிருந்தனர்.

குறித்த செயலமர்வை ஆக்கபூர்வமாகவும், வெற்றிகரமாகவும் நடாத்திய கல்லூரியின் தொழில்நுட்பக் கழகத்தினருக்கும்,ஆசிரியர்கள் திரு.க.நிஷாந்தன்,திரு.உ.திருக்குமரன் மற்றும் அனுசரனை வழங்கிய வேலும் மயிலும் நிறுவனத்தாருக்கும் அதிபர், ஆசிரியர் உட்பட்ட கல்லூரிச் சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் சார்பில் பாடசாலைச் சமூகத்தினருக்கும் இச்செயலமர்வை முன்னெடுக்க உதவிய அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button