இலங்கை

தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்!

train

புணானை – வெலிகந்தவுக்கு இடையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு நோக்கிய மீனகயா நகரங்களுக்கு இடையிலான அதிவேக தொடருந்து கொழும்பு கோட்டையிலிருந்து நேற்று (28) இரவு 7 மணிக்கு புறப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சேவையில் ஈடுபடும் பொடி மெனிக்கே தொடருந்து இன்று (29) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புத்தளம் தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை முதல் அந்தப் பாதையில் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button