செய்திகள்பொருளாதார செய்திகள்
முதல் 14 நாளில் 31 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!!
Tourists
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இந்த வருடத்தின் முதல் 14 நாள் காலப்பகுதியில் 31 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாதாந்தம் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கான ஏதுநிலை உள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரான 2020 ஆம் ஆண்டில் சுமார் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
2018 ஆம் ஆண்டில் அதிக அளவில், அதாவது 23 லட்சம் பயணிகள் இலங்கை வந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.