கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 85 குழந்தைகள், தக்காளிக்காய்ச்சல் எனும் புதிய வகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு காய்ச்சல், உடல்வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது கொசுக்கடியால் உருவாகும் சிக்குன்குன்யாவின் பின்விளைவாக இருக்கலாம் எனவும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.