திரிபோஷவில் எஃப்ளொடொஸின் அடங்கியுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என பொறுப்புடன் கூறுகிறேன்.
எந்தவித அடிப்படையும் இல்லாமல் இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நான் தயாராகவுள்ளேன்.
இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களின் அனுமதியை பெறுவது அவசியமாகும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.