இலங்கைசெய்திகள்

பணம் வசூலிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை – தேசபந்து தென்னக்கோன்!!

thennagon

“முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் திரட்டி, அதனை வியாபாரமாகவே கொண்டு நடத்துபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களைத் திரட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

  • இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சில பிள்ளைகள் தமது பெற்றோரை வீதிகளில் விட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்களுடன் பேசுவோம். நிலைமையைத் தெளிவுபடுத்தி, மீள அழைத்துச் செல்லுமாறு கோருவோம். அவ்வாறு அழைத்துச் செல்லாதவர்களுக்குச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீதிகளில் அநாதரவாக உள்ள சிலர் தமது பிள்ளைகள் மற்றும் பாதுகாவலர்களிடம் செல்வதற்கு விரும்புவதில்லை. சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். அத்தகையவர்களைச் சமூக நலன்புரி திணைக்களத்திடம் ஒப்படைத்து, உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

அதேவேளை, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தி சிலர் மக்களிடம் பணம் பெறுகின்றனர். அவர்களுக்குச் சிறு தொகை வழங்கப்படுகின்றது. இது வியாபாரமாகவே நடக்கின்றது. அத்தகையவர்கள் தொடர்பான தகவல்கள் புலனாய்வுப் பிரிவு ஊடாகத் திரட்டப்பட்டுள்ளன. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button