எகிப்திய தலைநகர் கெயிரோவிலிருந்து தெற்காக 136 மைல் தொலைவில் உள்ள எல் பாநாசா (El Bahnasa) எனும் பிரதேசத்தில் 2,500 வருட பழைமையான இரு மனித சடலங்களை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆண் மற்றும் பெண் ஆகியோரின் சடலங்கள் தங்கத்தால் ஆன நாக்குடன் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்க நாக்கின் மூலம் இறைவனுடன் பேச முடியும் என பண்டைய எகிப்தியர்களின் நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண முறையில், இந்த சடலங்கள் மிக பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக எகிப்திய சுற்றுலா மற்றும் பழைமை பொருள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிறிஸ்துவிற்கு முன் 525 முதல் 664 வரையான காலப்பகுதியினில் ஆட்சியில் இருந்த செயிற்றி பரம்பரை காலத்தில் இந்த சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.
ஆரம்ப அறிக்கைக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்ட இந்த சடலங்கள் மிகவும் அபூர்வமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.