காத்தான்குடி கடலில் மீன்பிடி படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் சென்ற மீனவர்களும் உயிர் தப்பிய நிலையில் கரையை வந்தடைந்தனர்.
காத்தான்குடி கடலில் (30) வியாழக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற சிறிய மீன்படி படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் சென்ற இரு மீனவர்களும் உயிர் தப்பிய நிலையில் கரையை வந்தடைந்தனர்.
வழமைபோன்று வியாழக்கிழமையும் காலை 6 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடலுக்கு இரு மீனவர்கள் சிறிய மின்பிடி படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதன் போது கடலில் சுழல் காற்று ஒன்று திடீரென வீசியதால் அந்த மீன்பிடி படகு கவிழ்ந்துள்ளது. அதில் சென்ற இரு மீனவர்களும் கடலில் மூழ்கிய நிலையில் குறித்த மீனவர்கள் இருவரும் மூழ்கிய நிலையில் அம் மீன்பிடி படகில் தொங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனை அறிந்த கரையில் நின்ற மீனவர்கள் மீன்பிடி படகொன்றில் கடலுக்கு சென்று குறித்த இரு மீனவர்களையும் காப்பாற்றிக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தாக மீனவர்கள் தெரிவித்தனர். கடலில் மூழ்கிய சிறிய மீன்பிடி படகை எடுப்பதற்கு முயறச்சிகளை மேற் கொண்டுவருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். கடலில் மூழ்கி உயிர்தப்பிய இருமீனவர்களும் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மீனவர்களாகும்.
செய்தியாளர் – வ.சக்திவேல்