தமிழ் மக்கள் அனைவருக்கும் இன்று ஒரு மகத்துவமான நாள். அதாவது விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கான நாள். மனது உருக கண்ணீர் கொப்பளிக்கும் உன்னத வேளை இன்றைய நாளில் புலம்படும். மக்கள் இந்த நினைவுகூருதலுக்காக ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
இருப்பினும் வடக்கு கிழக்கின் பல இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. நினைவுகூருதலுக்கு நீதிமன்றங்கள் தடைவிதித்திருந்த போதும் பின்னர் அத்தடைகளில் திருத்தங்கள் செய்துள்ளதன்படி சட்ட விதிகளுக்கு அமைய அடையாளங்கள், நினைவுச்சின்னங்கள் ஏதுமின்றி நினைகூரலை முன்னெடுக்கவும் கூட்டுப்பிரார்த்தனைகளை நடாத்தவும் மக்கள் ஆயத்தமாகின்றனர்.
நினைவுகூர்தலை தடுக்கும் முகமாக பொலிஸாரினால் விண்ணப்பங்களும் நகர்த்தல் பத்திரங்களும் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அவை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டிருந்ததன.