இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் பணி!

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக அதனை பெற்றுக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்ளவிருந்த வசதி ஒக்டோபர் மாதம் வரை முழுமை அடைந்துள்ளது.

இதன் காரணமாக முன்கூட்டியே நேரம் ஒதுக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் நவம்பர் மாதத்திலேயே உள்ளதென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முற்கூட்டியே நேரம் அல்லது திகதியை ஒதுக்கிக் கொள்வதற்கான வசதிகளின் கீழ் நாள் ஒன்றுக்கு 1000 கடவுச்சீட்டுகள் வெளியிடப்படுவதாக திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி எச்.பீ.சந்திரலால் தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி மாத்திரம் ஒரு நாள் மற்றும் பொது சேவையின் கீழ் 4700 விண்ணப்பங்களை ஏற்க நேரிட்டுள்ளது. இதனால் எல்லையற்ற அளவு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதனால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த நெருக்கடி குறையும் என தான் நம்புவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி எச்.பீ.சந்திரலால் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button