இலங்கையில் புதிய வரி செலுத்தும் முறைமை ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஜனவரி முதலாம் திகதி முதல் தனிநபர் வேதனத்தில் வருமான வரி தாக்கம் செலுத்தவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வேதனத்தை பெறுபவரிடம் 3,500 ரூபா வரியாக அறவிடப்படவுள்ளது.
2 இலட்சம் ரூபா வேதனத்தை பெறுபவரிடம் 10,500 ரூபாவும், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வருமானத்தை பெறும் நபரிடம் 21 ஆயிரம் ரூபாவும், வருமான வரியாக அறவிடப்படவுள்ளது.
அத்துடன், 3 இலட்சம் ரூபா மாதாந்த வேதனத்தை பெறும் நபரிடம் 35 ஆயிரம் ரூபா வரியாக அறவிடப்படவுள்ளதுடன், 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வேதனத்தை ஈட்டுபவர் 52 ஆயிரத்து 500 ரூபாவை வருமான வரியாக செலுத்த வேண்டும்.
இதுதவிர, 4 இலட்சம் ரூபா வேதனத்தை பெறுபவர் 70,500 ரூபாவும், 5 இலட்சம் ரூபா வருமானம் பெறும் நபர் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாவையும் வருமான வரியாக செலுத்த வேண்டும்.
7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வருமானம் பெறும் நபர் ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாவும், 10 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவர் 2 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா வருமான வரியாக செலுத்த நேரிடும்.
எவ்வாறாயினும் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வேதனத்தை பெறும் தனிநபருக்கு இந்த வருமான வரி விதிப்பு தாக்கம் செலுத்தாது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் வர்த்தக நிறுவன வருமான வரியிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நிலையான, சிறிய மற்றும் நடுத்தர, தொழில் முயற்சி, ஏற்றுமதி பொருட்கள், தகவல் தொழிநுட்பம், கல்வி, சுற்றுலா, சுகாதாரம், நிர்மாணம், உற்பத்தி என்பனவற்றுக்கு 30 சதவீதம் வரி அறவிடப்படவுள்ளது.
எவ்வாறியினும், ஏற்றுமதி சேவைகளுக்கு வர்த்தக நிறுவன வருமான வரி தாக்கம் செலுத்தாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.