யாழ். கைதடியைச் சேர்ந்த, தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஸ்ரீதர் ஞானசீலி தம்பதிகளின் புதல்வி இளையாள் அவர்கள் தனது நடிப்பாற்றலால் சர்வதேச அரங்கில் தெரியப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் jacque audiard அவர்களின் இயக்கத்தில் 26 ஆகஸ்ட்டில் உலக திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் ‘தீபன்’. (DHEEPAN) ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து பிரான்சுக்குள் வந்த மூன்று பேரைப் பற்றியது.
இப்படம் இந்த வாரத்தில் பிரான்சில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவான Festival De Cannes 2015 இல் திரையிடப்பட்டதுடன் இவ்விழாவின் அதியுயர் விருதான Palme d’Or விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டு அந்த விருதினையும் இன்று தனதாக்கிக் கொண்டது.
அகதியாக வந்தவர்கள், புது நாட்டில் புதுச் சூழலில் எப்படி வாழ்கிறார்கள், வாழ்க்கையை, எப்படி எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது இதன் கதை. பிரான்சிலும் தென்னிந்தியாவிலும் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் எழுத்தாளர் சக்தி ஷோபா , கலையேஸ்வரி சீனிவாசன் ,செல்வி இளையாள் ஸ்ரீதர் (கிளவ்டீனா விநாசித்தம்பி) ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,
.
அப்பா வினாசித்தம்பி சிறீதர் பாடகராக இசைத்துறையிலும் அம்மா நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஊடகங்களிலும் மேடைகளிலும் அறியப்பட்டவர்கள். தற்போது மகள் நடிப்புத்துறையில் சர்வதேச சினிமாவிலும் அறியப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.