அவுஸ்ரேலியாவின் பிரபல விமான சேவையான Qantas இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கும் சிட்னிக்கும் இடையிலான இந்த விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆரம்பமாகவுள்ள இந்தப் புதிய சேவை,அவுஸ்ரேலியாவுக்கும் பெங்களூருக்குமான தற்போதைய விமானப் பயண நேரத்திலும் பார்க்க மூன்று மணி நேரம் குறைவானது என்றும், பெங்களூருக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள் இந்த விமான சேவையினால் மேலும் வலுப்பெறும் என்றும் Qantas தெரிவித்துள்ளது.