செய்திகள்புலச்செய்திகள்

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு!!

swiss

இன்று (08) சுவிற்சர்லாந்தின் தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி 28 ஆவது பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்தில் நாடுதழுவிய ரீதியில் 61 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதன்போது இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 4200 வரையிலான மாணவர்கள் பங்குபற்றினர்.

பத்தாம் வகுப்புத்தேர்வில் 381 மாணவர்களும் பதினோராம் வகுப்புத்தேர்வில் 224 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 228 மாணவர்களும் தோற்றியிருந்தனர் என்பதுடன் தமிழ்மொழித்தேர்வுடன் சைவ சமயம், றோமன், கத்தோலிக்க சமயம், ஆகிய சமயபாடத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர்.

Related Articles

Leave a Reply

Back to top button