தமிழ்நாடு, நாமக்கல் வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 85 வயது பாப்பா என்ற மாது சற்றும் சிரமமின்றி ஏரி, ஆறு, கிணறு ஆகியவற்றில் முக்குளித்து நீச்சலடிக்கிறார்.
அவர் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து வயதினருக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்து வருவதாக The News Minute செய்தி நிறுவனம் கூறியது.
பாப்பா தமது தந்தையிடமிருந்து 5 வயதில் நீச்சல் கற்றுக்கொண்டார்.
பலருக்கும் நீச்சல் கலையைக் கொண்டுபோய் சேர்ப்பதே தமது குறிக்கோள் என்று அவர் The News Minute செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தமது மகன், மகள், பேரப்பிள்ளைகள் என அனைவருக்கும் அவர் நீச்சல் கலையைக் கற்றுக்கொடுத்துள்ளார்.
நீச்சலிலேயே பல விதமான நீச்சல் முறைகளையும் அவர் கற்றுள்ளார்.
தற்போது அவரிடம் 5 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் நீச்சல் கற்று வருகின்றனர்.