சுகாதார அமைச்சின் ‘சுவ சவன’ எனப்படும் அவசர தொலைபேசி சேவை இன்று (05) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார சேவை தொடர்பான மக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், ஆலோசனைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் குறைகளை உடனடியாக சுகாதார அமைச்சுக்கு தெரிவிக்கும் புதிய வழிமுறையாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, 1907 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு தமது ஆலோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும்.
தம்மிடம் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை, அதற்கு தேவையான வழிமுறைகளை கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அல்லது வேறு தொடர்பாடல் முறையில் அறியப்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘சுவ சவன’ சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கொழும்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெறவுள்ளது.