உலகம்செய்திகள்

ஆழிப்பேரலை – பசுபிக் கரையோர வாழ் மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

sunaami alert

தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவாகியுள்ள ஆழிப்பேரலைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

மூன்று மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு கடல் அலை காணப்படும் என ஜப்பான் எச்சரித்துள்ளது.

அத்துடன் ஜப்பானின் தெற்கு கரையில் 1.2 மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு அலை தாக்கக்கூடும் என அறிவுத்தப்பட்டுள்ளன.

அதிகரித்த அலை மற்றும் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் என்பன குறித்து அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.

இதேவேளை, கடலுக்கு அடியில் ஏற்பட்ட குறித்த எரிமலை வெடிப்பு காரணமாக டொங்காவில் ஆழிப்பேரலை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிமலை வெடிப்பின் சத்தம் இறுதியாக அமெரிக்கா வரையில் பதிவாகியுள்ளது.

எரிமலை வெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து 65 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டொங்காவின் பல பகுதிகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட சேத விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button