இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தென்னிலங்கையில் திடீரென உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய மீன்கள்

மாத்தறை, பொல்ஹேன கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக உயிரிழந்த நிலையில் பாரியளவிலான மீன்கள் கரையொதுங்கி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச மக்களினால் நாரா நிறுவனத்திடம் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு இறந்த இரண்டு திமிங்கலங்களின் உடல்களும் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கமைய, நாரா நிறுவனத்தின் மூத்த நிபுணர் உபுல் லியனகேவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை அதிகாரிகள் குழு ஒன்று அந்தப் பகுதிக்கு வந்திருந்தது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை விசாரணைகளின் பின்னரே கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button