இலங்கைசெய்திகள்

மனிதஉரிமைகள் தினத்தை முன்னிட்டு டயகமவில் போராட்டம்!!

Struggle in Dayagama

இன்று(10) டயகம தோட்டம் 5 ஆம் பிரிவில் விழிப்புணர்வு வீதி நாடகமும், கவனயீர்ப்பு போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்களுக்காக குரல் கொடுக்கும் ‘ப்ரொடெக்ட்’ அமைப்பின் தலைமையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “சிறுவர் தொழில் மற்றும் சிறுவர்களை வீட்டுத் தொழிலுக்கு அமர்த்துவதை நிறுத்து” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உடலில் தீப்பற்றி உயிரிழந்த 16 வயதாக ஹிஷாலினியின் மரண விசாரணை இதுவரை இழுப்பறியாக இருப்பதாகவும் இதற்கு உடனடியாக தீர்வு வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு, மக்கள் எதிர்நோக்கும், காணி, தொழிலாளர்களின் பிரச்சினைகள், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி அதிகரிப்பு, கல்வி தொடர்பான பிரச்சினைகள், சிறுவர், பெண்கள் உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Related Articles

Leave a Reply

Back to top button