இலங்கைசெய்திகள்

மீண்டும் 25ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு!!

strike

எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் குத்தகை நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும்.

குத்தகை நிறுவனங்கள் தொடர்ந்தும் பேருந்துகளை பொறுப்பேற்க இடமளிக்க முடியாது.

தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.

இல்லையெனில் பேருந்து போக்குவரத்தில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சங்கம், அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம், ஐக்கிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பன ஈடுபடும் என அஞ்ஜன பிரியன்ஜித் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button